நெல்லிக்குப்பம்: விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றின் கரையில் இருந்த கோவில் சிலைகள் ஆற்று தண்ணீரால் சேதமாயின.நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அங்காளம்மன் கோவில் புதியதாக கட்டி கும்பாபிஷேகம் நடந்து 3 மாதங்கள் ஆகிறது. கடந்த வாரம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அருகில் இருந்த கோவில் உள்ளே புகுந்ததில் சிலைகள் மூழ்கின. நேற்று தண்ணீர் வடிந்தவுடன் பார்த்ததில் மூன்று சிலைகள் சேதமாகியிருந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். முழுமையாக தண்ணீர் வடிந்தவுடன் சேதமான சிலைகளை சரி செய்து பரிகார பூஜைகள் செய்ய முடிவு செய்துள்ளனர்.