சிலர் நாம் எது செய்தாலும் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களின் சொற்களை மதித்து வருந்தலாமா... அவர்கள் விரும்புவது நம்மை நோகடிப்பதும், வருத்தம் கண்டு மகிழ்வதுமே ஆகும். இந்த வகை நபர்களை கண்டு கொள்ளாமல் மவுனமாக இருப்பதே நல்லது. அந்த மவுனமே ஆயுதமாய் அவர்களை துளைக்கும். இந்த உலகில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக யாரும் இல்லை. எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது. எனவே விமர்சனத்தை கண்டு பயப்படாதீர்கள். நம்மை பார்த்து பிறர் வியக்கும்படி வளர்ச்சி இருக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். நாம் பிறரை கெடுக்காமல் இருக்கும் வரை நம்மை யாராலும் கெடுக்க முடியாது.