முருகப்பெருமான் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு நன்றி செலுத்தும் நாள் திருக்கார்த்திகை. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அவை கங்கையில் இருந்த ஆறு தாமரைகளில் அவை குழந்தைகளாக மாறின. அவர்களை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகை பெண்களுக்கு சிவபெருமான் வழங்கினார். தங்களின் கடமையை முடித்தபின் வான மண்டலத்தில் நட்சத்திரமாக அவர்கள் இடம் பிடித்தனர். தன்னை வளர்த்த பெண்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த நாளில் விரதமிருப்போருக்கு எல்லா வரங்களும் கிடைக்கும் என முருகன் அருள்புரிந்தார். முருகன் அவதரித்த நட்சத்திரம் விசாகம்(வைகாசி மாதம்) என்றாலும் அதில் விரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. நமக்கு உதவியோருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதே இந்த விரதத்தின் நோக்கம்.