செங்குளத்தில் 26 ஆண்டுக்குப் பிறகு ஐந்து கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2021 12:11
நத்தம்: நத்தம் செங்குளத்தில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நத்தம் அருகே செங்குளம் கிராமத்தில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முத்தாலம்மன், முப்புலிகருப்பு, பகவதி, வெள்ளரி, காளியம்மன் என 5 கோயில்களிலும் அடுத்தடுத்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் யாகசாலை பூஜைகள் நடந்தது. மறுநாள் அதே யாகசாலையில் லெட்சுமி பூஜை, கோ பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் காசி, ராமேஸ்வரம், கரந்தமலை,அழகர் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலத்தில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டன. புனித தீர்த்த குடங்கள் பூஜைகளுக்கு பிறகு யாகசாலையில் இருந்து கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.