புதுச்சேரி: பூரணாங்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத் திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் திரவுபதி, அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. 12 மணிக்குப் பின் திருமணத்திற்கு வந்த ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 7.30 மணிக்கு திருமணக் கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று காலை அர்ச்சுனன் தவசு, நாளை பகல் 12 மணிக்கு தீ மிதி விழா, நாளை மறுநாள் (7ம் தேதி) தெப்பல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.