விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தை கிருத்திகையொட்டி வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு இன்று காலை 9:00 மணியளவில் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர் சுவாமிகள் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.