ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் சிவன் கோயிலில் இதுவரை இல்லாத வகையில் மழைநீர் தேங்கியது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். தீயணைப்பு துறையினர் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மழை பெய்ததால் மீண்டும் கோயிலுக்குள் தண்ணீர் வந்தது. இதனையும் நேற்று கோயில் நிர்வாகம் வெளியேற்றியது. மேலும் தாசில்தார் ராமச்சந்திரன், செயல்அலுவலர் ஜவஹர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவிலுக்குள் எந்த வகையில் தண்ணீர் வருகிறது என்பதை ஆய்வு செய்தனர். எதிர்காலத்தில் தண்ணீர் தேங்காத நிலையை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.