பதிவு செய்த நாள்
06
டிச
2021
01:12
கடலுார் : கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நாளை துவங்குகிறது. கடலுார், புதுப்பாளையம் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி பிரம்மாண்ட யாக சாலை பந்தலில் 21 யாக குண்டங்கள், பெருமாளுக்கு பஞ்ஜாத்மி குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 8:00 மணிக்கு பகவத் பிரார்த்னை, பஞ்சகவ்ய ஸ்தாபனம், வாஸ்து சாந்தி, மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, கும்பாராதனம், 8ம் தேதி காலை 7:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், 11:00 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனம், பூர்ணாகுதி சாற்றுமுறை நடக்கிறது.9ம் தேதி காலை 5:30 மணிக்கு விஸ்வரூபம், ஆராதனம், 7:15 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 8:45 மணிக்கு மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக் கல்யாண உற்சவம், 8:00 மணிக்கு சுவாமி உள் புறப்பாடு நடக்கிறது. 7ம் தேதி முதல் வேத பாராயணம் தொடக்கம், சேவா காலம் நடக்கிறது. யாக சாலை ஏற்பாடுகளை சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் அர்ச்சகர் ஜெயக்குமார் தலைமையில் நரசிம்மன், பிரபு பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். கும்பாபிேஷக ஏற்பாடுகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன், நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, கடலுார் ஜி.ஆர்.கே., எஸ்டேட் உரிமையாளர் துரைராஜ் செய்து வருகின்றனர்.