பதிவு செய்த நாள்
07
டிச
2021
02:12
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவிலில் நேற்று, 108 சங்காபிஷேக பூஜை நடந்தது.கார்த்திகை மாதம், மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, திருப்பூர், எஸ்.பெரியபாளையத்தில் உள்ள ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில், நேற்று 108 சங்காபிஷேக வழிபாடு நடந்தது. முன்னதாக, விநாயகர் பூஜை, புண்யாகம், கலச ஸ்தாபனம், ருத்ர ேஹாமம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, 16 வகையான திரவியங்கள் சுக்ரீஸ்வருக்கு அபி ேஷகம், அதனை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. நிறைவாக, 108 வலம்புரி சங்குகளில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட தீர்த்தத்தில் மகாபிஷேகம் நடந்தது. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில், சுக்ரீஸ்வரர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், ஊத்துக்குளி ரோடு, டி.பி.ஏ., காலனி, ஸ்ரீ காசிவிஸ்வநாதர், விசாலாட்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, சங்காபிேஷக பூஜை நடந்தது.