பதிவு செய்த நாள்
07
டிச
2021
02:12
கடலுார்: கடலுார் , புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜை இன்று துவங்கியது.
கடலுார்,
புதுப்பாளையம் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் 17
ஆண்டுகளுக்கு பிறகு வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கடலுார்
ஜி.ஆர்.கே ., எஸ்டேட் உரிமையாளர் துரை ராஜ் புதிதாக கட்டியுள்ள
ராஜகோபுரத்தில் அமைக்க உள்ள 7 கலசங்களுக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
இன்று (7ம் தேதி) துவங்கும் யாக சாலை பூஜையில் காலை 8:00 மணிக்கு
பகவத்பிரார்த்னை , வாஸ்து சாந்தி நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு
அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை நடக்கிறது. நாளை 8ம் தேதி காலை 7:00
மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், 11:00 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனம்,
பூர்ணாகுதி சாற்றுமுறை நடக்கிறது. 9ம் தே தி காலை 5:30 மணிக்கு விஸ்வரூபம்,
புண்யாஹம், ஆராதனம், ேஹாமம், 7:15 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம்,
கடம் புறப்பாடு, 8:45 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு
கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஆலோசனை: கும்பாபிேஷகத்தையொட்டி
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு தலைமையில்
ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக் குமார் ,
உதவிகோட்ட பொறியாளர் அசோகன், புதுநகர் இன்ஸ்பெக்டர் குரூமூர்த்தி, நிர்வாக
அதிகாரி முத்துலட்சுமி, உபயதார் ஜி.ஆர். கே ., எஸ்டேட் உரிமையாளர் துரைராஜ்
பங்கேற்றனர். பாதுகாப்பு பணிகள், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, கொரோனா
தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினர்.