மலைநம்பி கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2021 11:12
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி மலைப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் நம்பி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு வனத்துறை அனுமதியளிக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அக்டோபர் இறுதியிலிருந்து மழைபெய்தது. நம்பியாற்றிலும், நம்பி கோயிலுக்கு செல்லும் ரோட்டில் உள்ள சப்பாத்து ஓடையிலும் கன மழைபெய்யும் போதெல்லாம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அக்டோபர் கடைசி வாரத்திலிருந்து மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், மலைக்கு சுற்றுலா செல்லவும் வனத்துறையால் தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது 40 நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து தடை நீடிக்கிறது. இதனால் திருமலை நம்பி பெருமாளுக்கு உகந்த நாட்களான சனிக்கிழமை மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது, கோயிலில் ஒரு காலபூஜை மட்டும் நடக்கிறது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில், நம்பி ஆற்றிலும் வெள்ளம் வடிந்துள்ளது. இந்நிலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு வனத்துறை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். நம்பி கோயிலுக்கு செல்லதடை நீடிப்பதால், செக் போஸ்ட் கேட் பூட்டப்பட்டு வனத்துறை ஊழியர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.