பதிவு செய்த நாள்
08
டிச
2021
04:12
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் புதிதாக கட்டப்பட்ட ஜெய பெருமாள், ஆண்டாள் தாயார், நாகம்மாள் , கருடாழ்வார், ஆஞ்சநேயர், மகாமுனிவர் 9 நவகிரகங்கள் அடங்கிய திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை காலை 10:45 மணிக்கு நடைபெற உள்ளது.
விழாவில் அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை செயலாளர் ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, போலீஸ் எஸ்.பி., செ ந்தில்குமார், எம்.எல்.ஏ., தமிழரசி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். நாளை மறுநாள் 10ஆம் தே தி ஜெ கதீஸ்வர், திரிபுரசுந்தரி அம்மையார், ஜெய நந்தீஸ்வரர், தஞ்சையம்பதி விநாயகர், சித்தர் ஜெகதீஸ்வரர், சூட்டுக்கோல் செல்லப்பா சுவாமிகள் , சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில் கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது. இதில் மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை செயலாளர்ஜெய காந்தன், முன்னாள் பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் சத்தியநாதன், காரைக்குடி கிட் அண்ட் கிம் இன்ஜினியரிங் கல்லுாரி சேர்மன் அய்யப்பன், காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ.,சுந்தரம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை 18 சித்தர் கோயில் பரம்பரை பூஜாரியுமான பாலசுப்பிரமணியன் செய்து வருகிறார்.