பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த கருக்கமாரனஹள்ளியில் எழுந்தருளியுள்ள விநாயக பெருமான் மற்றும் அருள் தரும் துணிகட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 5ல் விநாயகர் பூசையுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி தொடர்ந்து திருக்குடங்கள் புறப்பட்டு விநாயக பெருமான் மற்றும் துணி கட்டிமாரியம்மன் கோயில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார்.