பதிவு செய்த நாள்
08
டிச
2021
05:12
சூலூர்: குமாரபாளையம் பெரிய வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலூர் அடுத்த குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன், மாகாளியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. இங்குள்ள பெரிய வலம்புரி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, டிச.,6 ம்தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்கு கால ஹோமங்கள் நடந்தன. நேற்று மாலை, சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து செண்டை மேளத்துடன் பக்தர்கள் கத்தி போடுதல், கரகாட்டம், மயிலாட்டத்துடன் முளைப்பாலிகை ஊர்வலம் குமாரபாளையம் வந்தது. இன்று காலை, 6:30 மணிக்கு ஐந்தாம் கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி முடிந்து, 10:00 மணிக்கு, கொடிமரம், விமானம், பெரிய வலம்புரி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறுமுகை வெள்ளிக்குப்பம்பாளையம் வேணு கான பஜனை குழுவினரின் பஜனை நடந்தது.