பதிவு செய்த நாள்
11
டிச
2021
03:12
புதுச்சேரி: பிரதமர் நரேந்திரமோடி 13ம் தேதி பங்கேற்கும் காசி புனரமைக்கும் பணி துவக்க விழா, புதுச்சேரியில் 30 இடங்களில் எல்.இ.டி., திரை மூலம் ஒளிபரப்படும் என, பா.ஜ., தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது;இந்துக்களின் புனித ஸ்த லமாக காசியில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.காசி விஸ்வநாதர் ஆலயத்தை புனரமைத்து அதனை சுற்றியுள்ள பகுதி களை அழகுபடுத்தி, புராதன நகரமாக உலகம் அறி யும் வகையில், மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரதமர் செயல்பட்டு வருகிறார்.அதன்படி, காசி புனரமைப்பு பணி நாளை மறுநாள் 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார். விழாவில், மாநில முதல்வர்கள், ஆன்மிக வாதிகள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரியில் இருந்து 20 பேர் பங்கேற்கின்றனர்.இந்த நிகழ்வை, நாடு முழுவதும் 51 ஆயிரம் இடங்களில் எல்.இ.டி., திரை மூலம் பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கோவில்கள், ஆன்மிக தளங்கள் உட்பட 30 இடங்களில் எல்.இ.டி., திரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம் நாடு முழுவதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 5ம் தேதி முதல் காசியில் துாய்மை பணி துவங்கி நடந்து வருகிறது, என்றார். பேட்டியின் போது, அமைச்சர் சாய் சரவணன்குமார், அசோக்பாபு எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.