Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குஷியில் திருப்பரங்குன்றம் கோயில் ... கசவனம்பட்டியில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

பதிவு செய்த நாள்

12 டிச
2021
07:12

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பின் போது பல்லாயிரக்கானோர் குவிவதால் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி உற்சவம், திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறு நாள், 4ம் தேதி முதல், உற்சவ நாட்களில், நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். டிசம்பர் 14ம் தேதி, ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி திருநாளில், சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அன்று 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டுஅதிகாலை 4:45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார்.

கொரோனா கட்டுப்பாடு:  இந்நிலையில், சொர்க்கவாசல் திறப்பு அன்று, ஒரே நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள், மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல், பரமபதவாசல் திறப்பின் போது, பெருமாளுடன் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை, என்று கூறப்படுகிறது.

விடுமுறை அறிவிப்பு: டிசம்பர் 24ம் தேதி, நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடையும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தில், வரும் 14ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அன்று, மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அதே சமயம், பள்ளி, கல்லுாரி தேர்வுகள் நடைபெறுவதில், இந்த விடுமுறை பொருந்தாது. இதற்கு மாற்றாக, டிசம்பர் 18 ம் தேதி, வேலை நாளாக இருக்கும், என்று கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar