திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை 14 வயது தெய்வானை ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு சில தினங்களுக்கு முன்பு கோயிலுக்கு திரும்பியது. மண்டபத்தில் யானை குஷியாக உள்ளது.ஸ நாளை முதல் நடைப்பயிற்சி துவங்குகிறது. கோயிலில் இருந்த யானை அவ்வை உடல் நலக்குறைவால் 2012ல் இறந்தது.
2016இல் அசாமில் இருந்து உபயதாரர் மூலம் 9வயது யானை குட்டி கோயிலுக்கு வந்தது. அதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் தெய்வானை என பெயர் சூட்டப்பட்டது. கடந்த ஆண்டு யானை தாக்கியதில் பாகன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பின்பு யானை தெய்வானை 2020 ஜுன் மாதம் திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே 8 மாதங்கள் யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்பு யானை தெய்வானை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு 10 மாதங்கள் பராமரிக்கப்பட்டது.
கோயில் துணை கமிஷனர் ராமசாமி: முதுமலையில் யானைகளை பராமரிப்பு பணி செய்த சிவகுமார் அவரது மகனும் தற்போது யானை தெய்வானையை பராமரிக்க பாகன்களாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர் குடும்பத்துடன் திருப்பரங்குன்றத்தில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானை தெய்வானை நல்ல நிலையில் உள்ளது என ஒரு மாதத்திற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெய்வானையை பரிசோதித்த தமிழ்நாடு யானைகள் பராமரிப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன் தெரிவித்தார்.
தினம் காலையில் கோயிலுக்குள் மடப்பள்ளியில் உணவு சாப்பிட அழைத்துச் செல்லப்பட்டு யானை மண்டபத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மணல் மேடையிலும், . இரவில் யானை மண்டபத்தில் கட்டி வைக்கப் படுகிறது. வழக்கமான உணவுகள் வழங்கப்படுவதுடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பக்தர்கள் வழங்கும் ஒட்டு வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருள்களை யானைக்கு கொடுக்கக் கூடாது என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின் போது மட்டும் யானை வெளியில் கொண்டு வரப்படும். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு யானை வந்துள்ளதால் நன்கு பயிற்சி எடுக்கும் வரை பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவது இல்லை. அனைத்து கோயில்களிலும் இந்த கட்டுப்பாடு உள்ளது. இன்று முதல் கிரிவலப் பாதையில் நடைப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. என்றார்.