பதிவு செய்த நாள்
13
டிச
2021
06:12
திருப்பரங்குன்றம் : திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மார்கழியை முன்னிட்டு டிச., 16 முதல் ஜன., 13 வரை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10:30 மணிக்கு சாத்தப்படும்.
மீண்டும் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:00 மணிக்கு சாத்தப்படும். தினமும் அதிகாலை 5:30 மணிக்கு திருப்பாவை திருவெம்பாவை பாராயணம் நடக்கும். ஆருத்ரா தரிசனம், அனுமன் ஜெயந்தி, கூடாரவல்லி உள்ளிட்ட விழாக்கள் உள் விழாக்களாக நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
* சீனிவாசா நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் டிச., 16 முதல் ஜன., 14 வரை அதிகாலை 5:45 மணிக்கு திருப்பாவை திருவெம்பாவை பாராயணம், காலை 6:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை, ஜன., 2 அனுமன் ஜெயந்தி, ஜன., 11 ஆண்டாள் மாலை மாற்றும் வைபவம், ஜன., 13 வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.
* மகாலட்சுமி நெசவாளர் காலனி வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் டிச., 16 முதல் ஜன., 14 வரை அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாத சேவை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அதிகாலை 5: 30 மணிக்கு விஸ்வரூப பூஜை நடக்கிறது.