ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஆராட்டு விழா மற்றும் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2021 06:12
சின்னமனூர்: ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஐயப்ப ஆராட்டு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சின்னமனூர் ஐயப்பா சேவா சங்கம் கார்பில் கடந்த 53 ஆண்டுகளாக ஐயப்பன் ஆராட்டு மற்றும் அன்னதானம் நிகழ்ச்சிகள நடத்தப்பட்டு வருகிறது.. இந்தாண்டு நேற்று முன்தினம் மணிமண்டபத்திலிருந்து புறப்பட்டு முல்லையாற்றங்கரையில் ஐயப்பன் விக்ரகத்திற்கு ஆராட்டு நடைபெற்றது. தொடர்ந்து லெட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி நெல்லி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இங்குள்ள ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மணிமண்டபத்தில் வெளிமாநில மற்றும வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு 60 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்க தலைவர் கே எஸ் பெருமாள், துணைத்தலைவர் சிவ முருகேசன், குருசாமி கோவிந்தராஜன் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் செய்திருந்தன.