திருப்பரங்குன்றம்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அஸ்தரதேவர் பல்லக்கில் சரவண பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதியில் யாக பூஜைகள் முடிந்து சரவணப்பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்சவம் நடந்தது.
* திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் மார்கழி சிறப்பு பூஜைகள் நடந்தது.
* மகாலட்சுமி நெசவாளர் காலனி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பல்லாண்டு குழுவினரால் திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு விஸ்வரூப பூஜைகள் முடிந்து சிறப்பு அலங்காரமானது.
* சீனிவாசா நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருப்பாவை பாராயணம், திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடந்தது.
* பசுமலை விபூதி விநாயகர் கோயிலில் மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப் படியாகி பூஜைகள் நடந்தது.