மார்கழி முதல் நாள்: கோயில்களில் சிறப்பு வழிபாடு.. பக்திப் பரவசத்தில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2021 04:12
கோவை: மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற காரமடையில் நான்கு ரத வீதிகளில் ஸ்ரீ தாசபளஞ்சிக மகாஜன திருப்பாவைபஜனை வழிபாட்டுக் குழுவினர் பக்திப் பரவசத்துடன் பஜனைப் பாடல்களைப் பாடி வந்தனர்.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மார்கழி முதல் நாளில் மார்கழி முதல் நாளில் அதிகாலை நேரத்தில், கோவையிலுள்ள கோவில்களில் பஜனை நடந்தது. வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற காரமடையில் நான்கு ரத வீதிகளில் ஸ்ரீ தாசபளஞ்சிக மகாஜன திருப்பாவைபஜனை வழிபாட்டுக் குழுவினர் பக்திப் பரவசத்துடன் பஜனைப் பாடல்களைப் பாடி வந்தனர். கோவை சிங்கநல்லூரில் பிள்ளையார் சிலைக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். மயிலாப்பூர் மாட வீதிகளில் பக்தி பாடல்கள் பாடியவாறு பஜனை குழுவினர் வலம் வந்தனர். மார்கழி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புதுச்சேரி அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்திஆனந்த ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.