கூடலூர்: கூடலூர் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் 8-ம் ஆண்டு விழா நடந்தது. இன்று காலையில் நடந்த அன்னதானத்தை குருசாமிகள் ஜெகன், ஜீவானந்தம் தலைமையில், தி.மு.க., நகர செயலாளர் லோகன்துரை துவக்கி வைத்தார். நிர்வாகி சக்திவேல் முன்னிலை வகித்தார். மாலையில் ஐயப்ப சுவாமி ரத ஊர்வலம் காமாட்சியம்மன் கோயில் தெரு, மெயின் பஜார், ரதவீதி வழியாக சென்று ஐயப்பன் கோவிலில் நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.