அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை முருகன் கோவில் கலசாபிஷேக விழா வரும் 8ம் தேதி நடக்கிறது.அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் இடும்பன் கோவில் மகா மண்டபம் மற்றும் அடிவாரத்தில் பாலாம்பிகை கோவில் அருகில் நுழைவு வாயில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான கலச மகா அபிஷேகம் வரும் 8ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு 7ம் தேதி மாலை 6 மணிக்கு கிராம தேவதா பூஜை, அனுக்ஞை நடக்கிறது. மறுநாள்(8ம் தேதி) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், தொடர்ந்து 9 மணி முதல் 10 மணிக்குள் மகா கலசஅபிஷேகமும், வள்ளிதேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது.