அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் மேம்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2012 11:07
நாமக்கல்: "திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ளப்பட உள்ளது என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்செங்கோடு அர்த்தநாரீஸவரர் கோவிலை மேம்படுத்த, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்நிதி மூலம் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, அர்த்தநாரீஸ்வரர் கோவில் பயணிகள் உடை மாற்றும் அறை, ஓய்வறை, 24 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நவீன கழிப்பிடம் கட்ட, 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், கூடுதல் குடிநீர் வசதி எட்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் மேற்கொள்ளப்பட உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.