பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
திருத்தணி:முருகன் மலைக் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, 4 இடங்களில் தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.திருத்தணி முருகன் மலைக் கோவிலு<க்கு, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக் கோவிலில், கடந்த 1 மாதமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. கோவிலின் புதிய தக்கராக பொறுப்பு ஏற்ற ஜெய்சங்கர், நேற்று முன்தினம் மாலை, மலைக் கோவிலுக்கு வந்து பக்தர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது பக்தர்கள், "மலைக் கோவிலில் குடிநீர் வசதி இல்லை. கழிப்பறையிலும், போதிய தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என்றனர்.இதையடுத்து, ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ,4 தண்ணீர் தொட்டி (சின்டெக்ஸ்), நுழைவு வாயில், மூலவர் அறை பின்புறம், பிரசாத கடை, தேவர் மண்டபம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டது. நேற்று காலை, டிராக்டர் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பட்டது.