ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தர்மபுரம் சோனை கருப்பணசுவாமி கோவில், கும்பாபிஷேக விழா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நடைபெற்ற விளக்கு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தர்மபுரம் கிராமத்தினர் செய்திருந்தனர்.