2 கோவில்களின் திருப்பணிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2021 04:12
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் இரண்டு கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள 18 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. உருளையன்பேட்டையில் உள்ள சித்தி விநாயகர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோல், திருவள்ளுவர் சாலை அருந்ததி நகர் முத்தாலம்மன் கோவிலிலும் திருப்பணிகள் துவங்க உள்ளது.திருப்பணிகளுக்காக இரண்டு கோவில்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறை மூலமாக நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சித்தி விநாயகர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு 15 லட்சம் ரூபாய், முத்தாலம்மன் கோவிலுக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம், நேரு எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.