பதிவு செய்த நாள்
24
டிச
2021
02:12
சேலம்: உபன்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணனின் குமாரர், வேளுக்குடி ரங்கநாதன் சுவாமிகள் தனுர் மாதத்தையொட்டி, சேலத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு சொற்பொழிவு நடத்தி வருகிறார்.
கடந்த, 16 முதல், ஜன., 13 வரை செவ்வாய்பேட்டை வாசவி திருமண மண்டபத்தில் தினமும் காலை, 7:00 முதல் 8:30 மணி வரை திருப்பாவை உபன்யாசம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் முதல், நாளை வரை சேலம் அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் மூன்று நாட்கள் மாலை, 6:30 முதல் இரவு, 8:00 மணி வரை ‘பாகவதர்கள் வைபவம்’ என்ற தலைப்பில் உபன்யாசம் செய்து வருகிறார். இதே போல் சேலம் சுமங்கலி திருமண மண்டபத்தில் வரும், 25 முதல் ஜன.,2 வரை தினமும் மாலை, 6:30 முதல் இரவு, 8:00 மணி வரை ராமாயண சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார். ஜன., 3 முதல், 11 வரை செவ்வாய்பேட்டை ருக்மணி சமேத பாண்டுரங்கநாதர் கோவிலில் மாலை, 6:30 முதல் இரவு, 8:00 மணி வரை கிருஷ்ண பைவபம் என்ற தலைப்பில் உபன்யாசம் செய்கிறார்.