கரூர்: மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பிரதட்சிணம் சாலையில் அமைந்துள்ள புனித தெரசாமாள் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் பங்குத்தந்தை தலைமையில் பங்கு மக்கள் இத்திருப்பலியில் பலர் கலந்துகொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடியும் இசைக்கருவிகளை இசைத்தும் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கரூரில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடக்கின்றன. கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவில் தொடங்கிய வழிபாடு அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றார்கள். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டன.
இந்த வருடம் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் வழிபாடு நடத்துவதற்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதாலும் விமரிசையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டு வருகின்றது. டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும், குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் பண்டிகை கொண்டாட ஆயத்தமானார்கள். சனிக்கிழையான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, மாயனூர், இலாலாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து ஆலயங்களும் அலங்கார மின் விளக்குகளால் நேற்று முன் தினத்திலிருந்து இரவு அலங்கரிக்கப்பட்டன. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடக்கின்றன. கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவில் தொடங்கும் வழிபாடு அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. தென் இந்திய திருச்சபை ஆலயங்கள், மெத்தடிஸ்ட், ஆர்க்காடு லூத்ரன், பெந்தேகோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்கி, காலை 6, 7 மணி வரை நடைபெறும்.