பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
12:07
தென்காசி : தென்காசி தென்பழனியாண்டவர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. தென்காசி தென்பழனியாண்டவர் கோயிலில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜகோபுரம், விமானம், பரிவார மூர்த்திகள் சன்னதி மற்றும் முன் மண்டபம் கட்டப்பட்டது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த 3ம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. அன்று காலையில் மகா கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வபூஜை, பூர்ணாகுதி, நவக்கிரக ஹோமம், ஷடாச்சர ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பிரசன்னாபிஷேகம், மாலையில் தீர்த்த ஸங்கிரஹணம், ரக்ஷõபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி நடந்தது. இரண்டாம் நாளான 4ம் தேதி காலையில் துவார பூஜை, ஸூர்ய கும்ப பூஜை, வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாகசாலை வேள்வி, மாலையில் விஷேச சந்தி, கும்ப பூஜை, மூன்றாம் கால யாகசாலை வேள்வி, இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.
மூன்றாம் நாளான நேற்று காலையில் துவார பூஜை, ஸூர்ய கும்ப பூஜை, வேதிகார்ச்சனை, பிரம்ப சுத்தி, பிம்ப ரக்ஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை வேள்வி, திரவியாகுதி, ஸ்பரிசாகுதி, மகா பூர்ணாகுதி, ஸபம்யோஜனம், ஜெபஸமர்ப்பணம், யாத்ராதானம் நடந்தது. காலை 10.45 மணிக்கு கடம் புறப்பட்டது. விநாயகர், மூலவர், விமானம், சண்முகர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னதிகளுக்கு புனிதநீர் குடங்கள் எடுத்து செல்லப்பட்டன. 11.05 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி மகாபிஷேகம் செய்தனர். அப்போது பக்தர்கள் வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா! என பக்தி கோஷங்களை எழுப்பினர். மகா தீபாராதனை நடந்தது. புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தை கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார், விஸ்வநாத சிவாச்சாரியார், கிருஷ்ணமூர்த்தி பட்டர், சங்கரசுப்பிரமணிய பட்டர், கோமதிநடராஜ பட்டர் நடத்தினர். மதியம் பக்தர்களுக்கு ராகவேந்திரா டிரஸ்ட் மற்றும் உபயதாரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதி உலாவும் நடந்தது.
விழாவில் காசிவிசுவநாதர் கோயில் நிர்வாக அதிகாரி கணபதி முருகன், தர்மராஜ், ராஜாமணி டெக்ஸ்டைல்ஸ் ராஜாமணி, சண்முகசுந்தரம், ஆனந்தா சாமில் அழகராஜா, வக்கீல்கள் எஸ்.கே.நாராயணன், காசிவிசுவநாதன், ரவிசங்கர், மகாதேவ அய்யர் பெட்ரோல் பங்க் ராமையா, மோகன், குற்றாலம் அ.தி.மு.க.செயலாளர் குமார் பாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார், நகராட்சி தலைவர் பானு, தேனாண்டாள் பேப்பர்ஸ் நாச்சியப்பன், பரமகல்யாணி ஜூவல்லர்ஸ் பெருமாள் நாயுடு, கவுரி ஜூவல்லரி முருகன்ராஜ். கவுன்சிலர் சாமி, மாடசாமி ஜோதிடர், வைகை குமார், ஜெய் ரியல் எஸ்டேட் சாமி, பிச்சாண்டி செட்டியார் சைக்கிள் டீலர் பழனி, சதீஷ், செல்வி மொபைல் ரமேஷ், எஸ்.ஆர்.எல்.புளுமெட்டல் சின்னத்தம்பி, எம்.ஆர்.டி.டி.கிளை மேலாளர் கோமதிநாயகம், பாரத காந்திஜி அமைப்பு சாரா கட்டட தொழிலாளர் சங்க மாநில தலைவர் காந்தி, மேலமுத்தாரம்மன் கோவில் தெரு துவக்கப் பள்ளி முகவர் குலசேகரன், ஜேசிஸ் துரைமீனாட்சிநாதன், கிறிஸ்டோபர், வேலு, திருவிலஞ்சிகுமரன், செல்வம் பிரஸ் ஆனந்தகுமார். ஏ.ஜி.எம்.ஸ்டோர் கணேசன், அலங்கார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஈஸ்வரராஜா, அக்னி கம்ப்யூட்டர் மாரிமுத்து, செல்வம், முத்துக்குமார், அபெக்ஸ் அகாடமி ராமசுப்பிரமணியன், சென்னை ஸ்வீட்ஸ் குணசேகரன், மகாலிங்கம், சங்கரமகாலிங்கம், மாரியப்பன், அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஷமீம், வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரெங்கராஜ், கிருஷ்ணமூர்த்தி செட்டியார், பாலகிருஷ்ணன் செட்டியார், நடராஜன் செட்டியார், கூட்டுறவு மாரிமுத்து மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.,பாண்டியராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் செய்திருந்தனர்.