பதிவு செய்த நாள்
07
ஜூலை
2012
11:07
தென்காசி:தென்காசி தென்பழனியாண்டவர் கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது.தென்காசி தென்பழனியாண்டவர் கோயிலில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்று இரவு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாணம் நடந்தது. கோயில் முன் மண்டபத்தில் மணமக்கள் அலங்காரத்தில் சுவாமி அம்பாள் வீற்றிருந்தனர். சிறப்பு வேள்வி வளர்க்கப்பட்டது. வேத மந்திரங்களுடன் மேள, தாளம் முழங்க சண்முகர் வள்ளி, தெய்வானைக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.திருமண சடங்குகளை கிருஷ்ணமூர்த்தி பட்டர், சங்கரசுப்பிரமணிய பட்டர், கோமதி நடராஜ பட்டர் நடத்தினர். பக்தர்கள் மொய் எழுதினர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.நிகழ்ச்சியில் வக்கீல் எஸ்.கே.நாராயணன், காசிவிசுவநாதன், தர்மராஜ், ஆனந்தா சாமில் அழகராஜா, பரமகல்யாணி ஜூவல்லர்ஸ் பெருமாள் நாயுடு, கவுரி ஜூவல்லரி முருகன்ராஜ், கவுன்சிலர் சாமி, மாடசாமி ஜோதிடர், வைகை குமார், தேனாண்டாள் பேப்பர்ஸ் நாச்சியப்பன், ஜெய் ரியல் எஸ்டேட் சாமி, பிச்சாண்டி செட்டியார் சைக்கிள் டீலர் பழனி, சதீஷ், செல்வி மொபைல் ரமேஷ், எஸ்.ஆர்.எல்.புளுமெட்டல் சின்னத்தம்பி, எம்.ஆர்.டி.டி.,கிளை மேலாளர் கோமதிநாயகம், பாரத காந்திஜி அமைப்பு சாரா கட்டட தொழிலாளர் சங்க மாநில தலைவர் காந்தி, மேலமுத்தாரம்மன் கோவில் தெரு துவக்கப் பள்ளி முகவர் குலசேகரன், ஜேசிஸ் திருவிலஞ்சிகுமரன், கிறிஸ்டோபர், துரைமீனாட்சிநாதன், வேலு, செல்வம் பிரஸ் ஆனந்தகுமார், ஏ.ஜி.எம்.ஸ்டோர் கணேசன், அலங்கார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஈஸ்வரராஜா, அக்னி கம்ப்யூட்டர் மாரிமுத்து, செல்வம், முத்துக்குமார், அபெக்ஸ் அகாடமி ராமசுப்பிரமணியன், சென்னை ஸ்வீட்ஸ் குணசேகரன், மகாலிங்கம், சங்கரமகாலிங்கம், மாரியப்பன், வக்கீல் ரெங்கராஜ், கிருஷ்ணமூர்த்தி செட்டியார், பாலகிருஷ்ணன் செட்டியார், நடராஜன் செட்டியார், கூட்டுறவு மாரிமுத்து மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.