பதிவு செய்த நாள்
07
ஜூலை
2012
11:07
சிவகிரி:தலைவன்கோட்டை திருவாய்மொழியம்மன் கோயிலில் நாளை (8ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தலைவன்கோட்டையில் பழமையான திருவாய்மொழியம்மன் கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. நாளை (8ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தது. இன்று(7ம் தேதி) 2ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, பெருமாள் கோயில் வழிபாடு, 3ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேக நாளான நாளை (8ம் தேதி) காலை 4ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 11 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரம், மூலஸ்தானம் பரிவார தெய்வங்களாளுக்கும் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது.மாலையில் 508 திருவிளக்கு பூஜை நடக்கிறது. கல்பதரு பவர்டிரான்ஸ்மிஷன் தலைவர் மற்றும் சங்கரன்கோவில் ஏ.வி.கே. இண்டர் நேஷனல் பள்ளி ாளாளர் அய்யாத்துரை பாண்டியன் தலைமை வகிக்கிறார். தலைவன்கோட்டை பஞ்., தலைவர் பூசைப்பாண்டியன் வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செந்தூர்பாண்டியன், மாநில தேர்தல் ஆணையர் சோலை ஐயர், சென்னை ஐகோர்ட் நீதிபதி விஜயராகவன், சென்னை சரக ஐஜி மாசான முத்து, கலெக்டர் செல்வராஜ், பாஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்