உடன்குடி:குலசேகரன்பட்டணம் வீரமனோகரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.குலசேகரன்பட்டணம் வடக்கூர் வீரமனோகரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி காலை கணபதி ஹோமம், நவக்கிரகபூஜை, கும்பபூஜைகள் நடந்தது. பகலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையுடன் வருஷாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் வீரபாகுவல்லவராயர் செய்திருந்தார்.