சூலூர்: கரவளி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலூர் அடுத்த கரவளி மாதப்பூரில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் பழமையானது. நேற்று இங்கு, ஹனுமன் ஜெயந்தி விழாவும், ஐந்தாம் ஆண்டு விழா நடந்தது. காலை, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 9:00 மணி முதல் ஸ்ரீ சீனிவாச பெருமான் பஜனை குழு, மாண்டுரங்க பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனமும், கரிய மாணிக்க பெருமான் பஜனை குழுவின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. மதியம் அன்னதானம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு அருகம் பாளையம் காவடி குழுவின் காவடியாட்டம் மற்றும் அன்னூர் அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் நாம் சங்கீர்த்தனமும் நடந்தது. . விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இதேபோல், செஞ்சேரிமலை அடுத்துள்ள சின்னமலை ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் கோவிலிலும் நேற்று ஹனுமன் ஜெயந்தி விழா நடந்தது. சூலூர் வேங்கடநாத பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.