திருச்சி: அனுமன் ஜெயந்தியான நேற்று, திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மார்கழி மாதம், மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த தினத்தில், அனுமன் ஜெயந்தி கொன்டாடப்படுகிறது.அனுமன் ஜெயந்தி தினமான நேற்று, திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் மூலவர் ஆஞ்சநேயருக்கும், உற்சவர் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தங்கச் கவசம் அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை மற்றும் 10 ஆயிரத்து எட்டு ஜாங்கிரி மாலை சாற்றி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.தொடர்ந்து, லட்சார்ச்சனையும், ராம பாராயணமும் நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அனுமனை தரிசித்தனர்.