திருக்கோஷ்டியூர் பெருமாள் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2022 10:01
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யயன உற்ஸவம் பகல்பத்து உற்ஸவம் நேற்று மாலை துவங்கியது. .
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று மாலை 5:30 மணி அளவில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளினார். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் பெருமாளுக்கு காப்புக் கட்டி உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து பூஜை,ஆராதனைகள் நடந்து பெரியாழ்வாருக்கு மரியாதை நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், மாலையில் திருவாராதனம், பெரியாழ்வாருக்கு மரியாதையும் நடைபெறும். தொடர்ந்து தினசரி ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருளல் நடைபெறும்.. ஜன.12 ல் திருமங்கையாழ்வாருக்கு மோட்சம் அருளி, ஆழ்வார் திருவடி தொழுதல் நடைபெறும். பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பெருமாள் தென்னமரத்து வீதி எழுந்தருளி பகல் பத்து உற்ஸவம் நிறைவடையும். ஜன.13 ல் வைகுண்ட ஏகாதாசி விழாவும், மறு நாள் ராப்பத்து உற்ஸவம் துவக்கமும் நடைபெறும்.