திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், செவ்வாடை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேல்மருவத்துார் சித்தர் பீட ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் வருகின்றனர்.கோவிலில், சித்திரை பவுர்ணமி, தைப்பூசம் உள்ளிட்ட உற்சவங்களின் போது, பக்தர்கள் அதிகம் குவிகின்றனர். இம்மாதம் விரதமிருந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு மாலை அணிவித்து, வழிபட்டு செல்கின்றனர்.அதன்படி அம்மனை தரிசித்த பின், திருப்போரூர் கந்தசுவாமிக்கு, நேற்று, செவ்வாடை பக்தர்கள் வந்தனர். சரவண பொய்கை குளத்தில் நீராடி, சுவாமியை தரிசித்தனர்.