கடலாடி: கடலாடி அருகே மாரந்தை கிராமத்தில் செந்தூர் மருதுபாண்டிய ஆத்ம லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு குருபூஜை விழா நடந்தது. மூலவர், விநாயகர், நந்திகேஸ்வரர், நாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகளுக்கு பின் சந்திர தரிசனம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.