அனுமன் வழிபாடு என்றதும் நம் நினைவுக்கு வருபவை வெற்றிலை மாலை (வெற்றி வேண்டி அணிவிப்பது), வடைமாலை (ராகுதோஷம் நீங்க), வெண்ணெய்க்காப்பு ( பிரச்னை பனி போல் மறைய) இவை தவிர செந்துாரம் அணிவித்தல், ராமநாமம் எழுதப்பட்ட மாலை சார்த்துதல் சிறப்பானவை. வாயுமைந்தரான அனுமனின் அருளைப் பெற மாதம் தோறும் மூலநட்சத்திரத்தன்று விரதமிருப்பது சிறப்பு. அந்த நாளில் ராம நாமத்தை 108 அல்லது 1008 முறை ஜபிக்கலாம். அனுமன் அஷ்டோத்ரம், அனுமன் சாலீசா படிக்கலாம்.