ராமேஸ்வரம்: கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் ஜன., 9 வரை ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க தமிழக அரசு தடை விதித்தது.
தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவலை தடுக்க அரசு சில கட்டுபாடுகளை அறிவித்து வெள்ளி முதல் ஞாயிறு வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசிக்க தடை விதித்தது.
அதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று முதல் ஜன., 9 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து நடை மூடப்பட்டு இருக்கும். இதன்பின் ஜன., 10 முதல் கோயில் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜைகள் நடக்கும், பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே இன்று முதல் ஜன., 9 வரை பக்தர்கள் கோயிலில் தரிசிக்க வருவதை தவிர்க்க வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.