பதிவு செய்த நாள்
07
ஜன
2022
05:01
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பக்தர்களுக்கு தடை விதித்ததால் கோவில்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் காலசம்ஹாரமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்த இத்தளத்தில் 60, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளை செய்து சுவாமியை வழிபட்டால் ஆயுள் விருத்தி அடையும் என்பது ஐதீகம் கொரோனா பரவலை தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிலில் நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வருகை இன்றி கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது இது போல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டநாதர் கோயில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் சுவாமி கோவில், திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், உள்ளிட்ட தேவார பாடல்பெற்ற சிவன் கோவில்களும், 108 திவ்ய தேச பெருமாள் கோவில்களும் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை படி திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், திருமணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.