உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்: வைரமுடி தரித்து சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2022 07:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தேகளீசபெருமாள் வைரமுடி தரித்து வீதியுலா நடந்தது.
நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக பகல் பத்து விழா நடந்து வருகிறது. விழாவின் 6ல் நாள் காலை தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 4:00 மணிக்கு தேளீசபெருமாள் வைரமுடி தரித்து, செங்கோல் ஏந்தி, அரங்கநாதர் பதக்கம் சூடி, மாங்காய் மாலை, லஷ்மிஇரட்டைமணி, மகரகண்டி அணிந்து கண்கொள்ளா காட்சியாக எழுந்தருளி, திருமங்கையாழ்வார் பாடிய பெரிய திருமொழி எனும் திவ்ய பிரபந்தத்தில் 20 பாசுரங்கள் பாடப்பட்டு, சேவை சாற்றுமறை, தீபாராதனை முடிந்து ஆலய பிரதட்சிணமாக மூன்றுமுறை வலம் வந்து பெருமாள் சன்னதியில் எழுந்தருளினார். ஒருவனா தடை காரணமாக பக்தர்கள் இன்றி ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் ஏஜெட் கோலாகலன் மேற்பார்வையில் பட்டாச்சாரியார்கள் மட்டுமே கலந்துகொண்டு விழாவை நடத்தினர்.