பதிவு செய்த நாள்
10
ஜன
2022
03:01
குமாரபாளையம்: குமாரபாளையம், சவுண்டம்மன் திருவிழாவிற்காக முகூர்த்தக்கால் அமைக்கப்பட்டது. குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையில் நடைபெறுவது வழக்கம். சேலம் சாலை, பழைய பேட்டை சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் அமைக்கும் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. குழி தோண்டப்பட்டு அதில் நவ தானியங்கள், பால், மலர்கள் ஆகியன விழாக்குழுவினர் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் அனைவராலும் போடப்பட்டு, அதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முகூர்த்தகால் கம்பம் நடப்பட்டது. இதற்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஜன., 12 மாலை, 6:00 மணிக்கு காவேரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், 13 காலை காவேரி ஆற்றிலிருந்து சாமுண்டி அழைத்தல், இரவு மகா ஜோதி திருவீதி உலா நடைபெறவுள்ளது.