விஸ்வேஸ்வரர் கோவிலில் வாயிலார் நாயனாருக்கு குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2022 03:01
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வாயிலார் நாயனார் குருபூஜை நடந்தது. சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும், அறுபத்து மூன்று நாயன்மார்களில், வாயிலார் நாயனார் ஒருவர். இவர், திருமயிலாப்பூரில், வாயிலார் என்ற ஊரில் தோன்றினார். அவர், பெருங்குடியில் சிறப்பு பெற்ற வாயிலார் சிவபெருமானுக்கு திருத்தொண்டு புரிவதில், சிறப்பு பெற்று விளங்கினார். இவர் முக்தியடைந்த, மார்கழி மாதம், ரேவதி நட்சத்திரத்தன்று குரு பூஜை விழா நடக்கிறது. அவ்வகையில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள வாயிலார் நாயனாருக்கு, குரு பூஜை விழா நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.