காசி கோவில் பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2022 02:01
புதுடில்லி : வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பணியாற்றும் 100 பணியாளர்களுக்கு சணல் நாரினால் செய்யப்பட்ட காலணிகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. பிரமாண்ட அருங்காட்சியகம், நுாலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இந்த வளாகத்தை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். அப்போது கோவில் பணியாளர்கள் கடுங்குளிரிலும், வெறும் காலுடன் பணியாற்றுவதை பிரதமர் பார்த்தார். கோவில் வளாகத்துக்குள் தோல் மற்றும் ரப்பர் காலணிகளை அணிய முடியாது என்பதால், அவர்கள் வெறும் காலுடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பாதுகாலவர்கள், துாய்மை பணியாளர்கள் உட்பட 100 பேருக்கு, சணல் நாரினால் செய்யப்பட்ட காலணிகளை பிரதமர் பரிசாக அளித்து உள்ளார்.