ஆயக்குடி: பழநிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வரும் பாதையை சுத்தம் செய்யும் பணி துவங்கியது.
பழநிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை புரிகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பிரத்தியேக பேவர் பிளாக் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள சிறு சிறு கற்களை அகற்றும் பணியை பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் துவங்கி வைத்தனர். கம்பரசர் கொண்டு காற்றின் மூலம் மணல், சிறு சிறு கற்கள் அகற்றப்பட்டன. அப்போது பாதயாத்திரையாக வருகை புரிந்த பக்தர்களுக்கு முகக்கவசம் அணியவும் சாலை ஓரங்களில் பாதுகாப்பாக நடந்து வரும் எஸ்.பி அறிவுறுத்தினார். இணை ஆணையர் பாதயாத்திரை பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் டி.எஸ்.பி சத்யராஜ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.