பதிவு செய்த நாள்
12
ஜன
2022
12:01
ஹரித்வார், உத்தரகண்டின் ஹரித்வாரில் மஹர சங்கராந்தி அன்று கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஹரித்வார் நகரின் கங்கை நதியில் ஆண்டு தோறும் மஹர சங்கராந்தி அன்று லட்சக்கணக்கானோர் புனித நீராடுவது வழக்கம்.தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வரும் 14ல் மஹர சங்கராந்தியை முன்னிட்டு கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் அன்று இரவு 10:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை ஹரித்வாரில் ஊரடங்கும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கர் பாதிப்பு: மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும் பிரபல பின்னணி பாடகியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர், 92, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பினும், டாக்டர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனங்களுக்கு பூட்டு: டில்லியில் கொரோனா தொடர்ந்து அதிகரிப்பதால், இதுவரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வந்த தனியார் அலுவலகங்களை உடனடியாக மூட மாநில அரசு உத்தர விட்டது. மேலும் உணவகங்கள், பார் உள்ளிட்டவற்றையும் மூட உத்தரவிடப் பட்டுள்ளது. வீடுகளுக்கு உணவு பொருட்களை நேரடியாக சென்று வழங்க அனுமதி அளித்துள்ளது.
ராஜ்நாத் சிங் நலம்: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், கொரோனா பாதிப்பால் வீட்டில் தனிமையில் உள்ளார். டில்லி ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், அவரை பரிசோதனை செய்தனர். பின், அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைந்து குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தனர். அமைச்சர் ஆலோசனைகொரோனா பரவல் நிலவரம் தொடர்பாக நாடு முழுதும் உள்ள 120க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவு டாக்டர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கலந்துரையாடினார். அப்போது, பல்வேறு ஆலோசனைளை டாக்டர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இது குறித்து மாண்டவியா வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கொரோனாவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என நம்புகிறேன் என, தெரிவித்துள்ளார். அமெரிக்க மருந்துக்குஅனுமதி இல்லைஅமெரிக்காவைச் சேர்ந்த மெர்க்ஸ் நிறுவனத்தின் மோல்னுபிராவிர் என்ற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த மாதம் அனுமதியளித்தது.இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான ஐ.சி.எம்ஆர்., தேசிய சிறப்பு குழு தெரிவித்ததாவது:கொரோனா சிகிச்சையில் மோல்னுபிராவிர் மருந்து பெரிய பலன் அளிக்கவில்லை.க்ஷமேலும் இதை பயன்படுத்துவதில் நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அதனால் கொரோனா சிகிச்சையில் இந்த மருந்து தற்போது சேர்கப்படவில்லை. இவ்வாறு கூறியுள்ளது.