பழநி: தமிழக அரசின் கோரோனா வழிகாட்டு நெறி முறைப்படி ஜன 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை என அறிவித்தது இதனால் தைப்பூசபாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் பழநியில் குவிந்ததால் அடிவாரம் பகுதியில் முக்காடினர்.
பழநியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறை படி ஜன14, முதல் 18 வரை வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாதயாத்திரையாக நடந்து வந்த பக்தர்கள் கடந்த இரண்டு நாட்களாக பழநியில் குவிந்தனர். இதனால் பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் நிரம்பியிருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொது தரிசனத்தில் பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. போதுமான அளவு பஸ்கள் இல்லாததால் சிரமம் அடைந்தனர். சில சமயங்களில் அலைபேசி தொடர்பு சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டனர். சன்னதி வீதி கிரி வீதிகளின் இதில் இருசக்கர வாகனத்தை எழுப்பி வியாபாரம் செய்தவர்காளாலும், ஆக்கிரமிப்பாலும் பக்தர்கள் அவதிப்பட்டனர். இன்றும், நாளையும் மட்டுமே மலைக்கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.