விக்கிரவாண்டி: பஞ்சமாதேவியிலிருந்து திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து நேற்று மாலை 3 மணிக்கு சுப்பராயலு, கண்ணன் ராமானுஜதாசர், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் பாதயாத்திரையாக திருப்பதிக்கு நடைபயணம் புறப்பட்டனர். இக்குழுவினர் நேற்று மாலை 5.30 மணியளவில் விக்கிரவாண்டிடோல்கேட் பகுதியை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கோவிந்த பஜனை பாடல்கள் பாடினர். இக்குழுவினர் வரும் 15ம் தேதி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.