லாலாப்பேட்டை: சித்தலவாடி பகவதி அம்மன் கோவிலில் நடந்த மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். பிரசித்தி பெற்ற சித்தலவாடி பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான காளியம்மன், வீரமலையாண்டி கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், பூர்ண ஹூதி ஆகியவைகள் செய்யப்பட்டது. பிறகு அய்யர்மலை முத்து ரத்தின குருக்கள் முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, திம்மாச்சிபுரம், மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று இரவு முதல் வரும் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடக்கிறது.